அதிர்ந்து போனேன்
அரண்மனைப் பெண்கள்
அதையும் வாதிப்பர்
கோபம் கொப்பளித்தது
ஜைனாபதியை விற்றவன் மீது
முகலாயப் பெண்களின்
ஏவல்களால்
கிழிந்து தொங்குகிறாள்
பேச்சற்றுப் போவதொன்றும்
சாத்தியமில்லாமலில்லை
அரண்மனைப் பெண்கள்
அதையும் வாதிப்பர்
அவளுக்குள்ளும் நெளியலாம்
சாதிப் புழு
அரண்மனையில் அவளை
அநாதரவாய் விட்டுவிட்டு
வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்