Thursday, July 31, 2014

ஜைனாபதியின் தீண்டலுக்காய்

அடுக்களையிலோ , கதவிடுக்கிலோ

ஒளிந்திருக்கக் கூடுமென

தேடிக்கொண்டிருக்கிறாள்

துக்ளக்கின் சாயமேறிய

ஔரங்கசீபை

துக்ளக்கின் சாயம்

கரைந்து விட்டிருந்தது

எஞ்சியிருக்கும்

காதலென்னும் விஷத்தை

விட்டுச்  சென்றிருந்தான் 

ஔரங்கசீப்

கோப்பை தகித்துக் கொண்டிருந்தது

ஜைனாபதியின் தீண்டலுக்காய்
 


Wednesday, May 21, 2014

வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்

அதிர்ந்து போனேன்

கோபம் கொப்பளித்தது 

ஜைனாபதியை  விற்றவன் மீது 

முகலாயப் பெண்களின் 

ஏவல்களால் 

கிழிந்து தொங்குகிறாள் 

பேச்சற்றுப்  போவதொன்றும் 

சாத்தியமில்லாமலில்லை 

அரண்மனைப் பெண்கள்

அதையும் வாதிப்பர்

அவளுக்குள்ளும்  நெளியலாம் 

சாதிப் புழு 

அரண்மனையில் அவளை 

அநாதரவாய் விட்டுவிட்டு 

வீடு  திரும்பிக் கொண்டிருக்கிறேன்